ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Author
0

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ரேணுக பெரேரா  இன்று(29)  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா கடந்த 17ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

1991ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிமுறைகளுக்கும், 2014.09.19ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையை நடத்துவதற்கான 56 அனுமதிப்பத்திரங்கள் சட்டபூர்வ நடைமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த அனுமதிப்பத்திரங்களுக்கான வருடாந்த கட்டணங்களையும் ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியதாகவும் முன்னாள் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ரேணுக பெரேராவை இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

எனினும், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவரை   நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top