பாடசாலையில் பதற வைத்த சம்பவம்; ஆசிரியை சுட்டுக்கொலை!

Author
0

   இந்தியா உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பெண் ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் பரவியதும், அவரது குடும்பத்தினர் மற்றும் பள்ளி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி,


ஆசிரியை பள்ளியில் வழக்கம்போல் பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சவுத் அன்சாரி என்பவர் மீது பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.

ஆசிரியையுடன் அவருக்கு முன்பே தொடர்பு இருந்ததாகவும், சில விஷயங்களில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு முன்பு அந்த நபர் ஆசிரியையை சந்திக்க பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகின்றது.

பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையுடன் பேசிய பின்னரே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சந்தேகத்துக்குரிய நபர் பள்ளிக்குள் செல்வதும், பின்னர் அங்கிருந்து வெளியேறுவதும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கொலைக்கான காரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top