கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்து இருவர் காயம்

Author
0

 கண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், அச்சமயத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

                                

இன்று (21) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வாகனங்களில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த இரண்டு வாகனங்களில் ஒன்று வைத்தியர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுவதுடன், மரம் முறிந்து விழுந்தமையினால் அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top