தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டு

Author
0

தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.


ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும், பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகியுள்ளன என்றும் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன

எனினும், அவ்வாறான எந்தவொரு நிலைமையும் எங்குமே இடம்பெறவில்லை. தற்போது பிரதமர் தொடர்பாகப் புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

பிரதமருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகக் கூறப்படுகின்றது. இவை அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.

பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால், வைத்தியர்கள் எதற்கும் குழம்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top