பூஜா ஹெக்டே
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. முகமூடி படத்தில் ஆரம்பித்து கடைசியாக அவர் நடித்து வெளியான ஜனநாயகன் படம் வரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது துல்கர் சல்மானுடன் ஸ்ரீ ஸ்ரீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இடையில் பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் பூஜா ஹெக்டே, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வதந்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
சில சமயத்தில் நம்மைப்பற்றி வெளியாகும் தகவல்களை பார்க்கும்போது, இது எங்கிருந்து வந்தது என்றே புரியாது. அதேபோன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்வதுதான் நல்லது என்று சோசியல் மீடியா வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.

