முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

Author
0

 ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (22.09.2026) நண்பகல் 12 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top