கைதான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.
சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊழியர்களைப் பணியமர்த்தியதன் மூலம் அரசுக்கு 30 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

.jpg)