கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

Author
0

 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

அதன்படி, உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் பிரதான அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.55 அமெரிக்க டொலரால் (3.14%) அதிகரித்து 116.72 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.



உலக அளவில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவற்றின் விலை இந்த 'பிரென்ட்' விலையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின்னரான கடந்த 6 மாத காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

 

இதேவேளை, அமெரிக்காவின் 'டபிள்யூ.டி.ஐ' (WTI) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.80 அமெரிக்க டொலரால் (3.8%) அதிகரித்து 103.27 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

 

இதன் மூலம் இந்த வாரத்தில் மட்டும் பிரெண்ட் ரக எண்ணெய் விலை 6 சதவீதத்தாலும், டபிள்யூ.டி.ஐ ரக எண்ணெய் விலை 2.3 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

 

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவுக்கும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top