சிகிரியாவில் அதிகரித்த காட்டு யானை அச்சுறுத்தல் - 77 வயது முதியவர் உயிரிழப்பு

Author
0

சிகிரியாவின் பலுதாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று(03.10.2026) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸாவைச் சேர்ந்த 77 வயது முதியவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது காட்டு யானை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top