பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, கொழும்புக்கும் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளின் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முன்னுரிமை எனத் தேசிய விமானச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக ரீதியான விமானப் போக்குவரத்துகளுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது என மதிப்பிடப்பட்டவுடன் குறித்த இரண்டு இடங்களுக்குமான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
மேலதிக தகவல்களுக்குப் பயணிகள் -இலங்கைக்குள் 1979, சர்வதேச அழைப்புகளுக்கு 94 11 777 1979 இல் தொடர்பு கொள்ளமுடியும்.
அத்துடன், 94 74 444 1979 வாட்ஸ்அப் (செய்தி பரிமாற்றம் மட்டும்), உங்கள் சுற்றுலா முகவர் அல்லது www.srilankan.com என்ற இணைத்துடன் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

