நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் இன்று முதல் (22) மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, பிரதான மின் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதன் தாக்கத்தால் நுரைச்சோலையில் உள்ள ஒரு மின்னாக்கியும் செயலிழந்தது.
இருப்பினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதால், மேலும் மின்வெட்டு தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்னாக்கியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் மின்சாரத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேசிய மின் அமைப்பு 250 மெகாவாட் மின் உற்பத்தித்திறனை இழந்துள்ளது.
இந்த 3 மின்னாக்கிகளில் 2, பராமரிப்புப் பணிகள் காரணமாக செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
இந்நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதால், மேலும் மின்வெட்டு தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

