முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையாகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலில் சாட்சி விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 5 காணிகளை கொள்முதல் செய்ததன் மூலம் 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

