தொடர் மழையால் மரக்கறிகளின் விலைகள் திடீர் உயர்வு

Author
0

 தொடர் மழையின் காரணமாக, மலைப்பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் பல வகை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த வாரம் ரூ. 350 முதல் 400 வரை இருந்த ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை, தற்போது ரூ. 600 முதல் 650 வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்பு ரூ. 250 ஆக இருந்த ஒரு கிலோ குடைமிளகாயின் விலை ரூ. 400 முதல் ரூ. 450 வரை உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு கிலோ முட்டைக்கோஸின் மொத்த விலை ரூ. 150இலிருந்து ரூ. 350 ஆக அதிகரித்துள்ளது.


பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் மரக்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என மேனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைமை அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முட்டை மற்றும் கோழி கொள்முதல் சுமார் 20விதுமு் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு ரூ. 30 முதல் ரூ. 32 வரை இருந்தாலும், தற்போது பண்ணைகள் அதே விலையில் முட்டைகளை விற்பனை செய்வதால், உற்பத்தியாளர்கள் இலாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நவம்பர் 15ஆம் திகதிக்குப் பிறகு பண்டிகைக் காலம் தொடங்குவதால், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் சங்கம் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top