நாடு முழுவதும் எரிவாயு விநியோக பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வந்த CORINTHIAN கப்பல், முன்தினம் நாட்டிற்கு வந்தடைந்ததாகவும், தற்போது எரிவாயு இருப்பு இறக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிவாயுவை ஏற்றி வரும் நான்காவது கப்பலான கொரிந்தியன், 3,900 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் ஒக்டோபர் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவிருப்பதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இருப்புக்கள் வந்து சேர்வதன் மூலம், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் சீராகும் என்றும் அறிவித்துள்ளது
சந்தைக்கான எரிவாயு விநியோகம் எந்தவித பற்றாக்குறையுமின்றி வழக்கம் போல் தொடரும் என்றும் அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.

