காலியில் பேருந்து - லொறி மோதி கோர விபத்து! ஆறுபேர் வைத்தியசாலையில்...

Author
0

காலி அருகே இன்று(27.10.2026) காலை இடம்பெற்ற பேருந்து - லொறி விபத்தின் காரணமாக காயமடைந்த நிலையில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி அருகே, அஹங்கம - கதளுவ சந்திக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காலிப் பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும், காலியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.


விபத்தின் காரணமாக பேருந்து வண்டியில் பயணித்த ஐந்து பேரும், லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top