பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட நகை வியாபாரி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Author
0

குளியாப்பிட்டியவைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரைத் தாக்கி, சித்திரவதை செய்து, தங்கம் மற்றும் பணத்தை பலவந்தமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூன்று நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


இதன்படி, சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகளும் தலா ரூ.100,000 வீதம் மொத்தம் ரூ.300,000 இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவண ஆதாரங்களை ஆராய்ந்த நீதிமன்றம், அரசியலமைப்பின் 11, 12(1) மற்றும் 13(2) உறுப்புரைகளின் கீழான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top