அரச புலனாய்வுச்சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் தலையிட அனுமதிகோரி பௌத்த பிக்குகள் குழுவொன்று தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுரேஷ் சலே இந்த ரிட் மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.
பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எனினும், இந்த இடைமனுக்களைத் தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

