இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்கு அப்பால் நங்கூரமிட்டுள்ள 47 வெளிநாட்டுக் கப்பல்களில் 15 கப்பல்கள் ஈரானுக்குச் சொந்தமானவை என உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நடுக்கடலில் சிக்கியுள்ள இந்த ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் இத்தகைய சேவைகளை ஈரானியக் கப்பல்களுக்கு வழங்கினால், அவை அமெரிக்காவின் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, பல ஈரானிய கப்பல்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் வழிமறிக்கப்பட்டு நடுக்கடலில் சிக்கியுள்ளன.
இக்கப்பல்கள் கடந்த சில மாதங்களாகவே இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏதேனும் தனியார் நிறுவனங்கள் இந்த ஈரானியக் கப்பல்களுக்கு உணவு, நீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்தால், அவை அமெரிக்காவின் தீவிர கண்காணிப்புக்கு உட்படும் அபாயம் உள்ளதுடன், அந்நிறுவனங்களுக்கு எதிராக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

