முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிற்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஷிரந்திக்கான இதய அறுவை சிசிக்சை மேற்கொள்ளப்பட்டது.
பிணை பெற்ற பின்னர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி அங்கு சிகிச்சை பெற்றுவந்த வேளையில் ஏற்பட்ட அவசர நிலை ஒன்றினைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் நாட்களில் மற்றொரு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

