எட்டப்பட்ட உடன்பாடு : சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி

Author
0

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


இந்த உடன்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை கிடைத்த மொத்த நிதியுதவி சுமார் 2.7 பில்லியன் டொலர்களாக உயர்வடையும்.

எனினும், நிறைவேற்று சபையின் இறுதி ஒப்புதலுக்கு முன்னர், 2027 பாதீட்டு அளவுருக்களுக்கு அமைவாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை பூர்த்தி செய்தல் என்பன அவசியமென சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரம் கணிசமான மீள்தன்மையைக் காட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுத் தலைவர் இவான் பபர்ஜியோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top