PHP மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அமைப்புகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவு (Sri Lanka CERT) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பாதுகாப்புக் குறைபாடுகள் மூலம் அனுமதி அற்ற அணுகல் (unauthorized access), தரவு திருட்டு (data theft) மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகள் முடங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, PHP மூலம் இயங்கும் அமைப்புகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவற்றின் மென்பொருள் பதிப்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ PHP இணையதள வழிகாட்டலின்படி பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செய்யுமாறு, இணைய உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கணினி பதிவுகளை (system logs) ஆய்வு செய்யுமாறும், உடனடியாகப் புதுப்பிக்க முடியாத அதிக ஆபத்துள்ள அமைப்புகளுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்துமாறும், இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

