பொலித்தீன் கழிவுகளை உண்டு உடல்நலக்குறைவால் விழுந்த காட்டு யானை

Author
0

 அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பகுதியின் சம்மாந்துறை பிரிவு எண் 4இல் அமைந்துள்ள நெல் வயலில் நேற்று (21.10.2026) காலையில் காட்டு யானை ஒன்று எழ முடியாமல் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வனவிலங்கு அதிகாரிகளின் தகவல்படி சுமார் 15 வயதுடைய ஆண் யானை ஒன்றே இவ்வாறு நெல் வயலின் நடுவே பலவீனமடைந்து விழுந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


மனிதர்களால் வீசப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகளை உண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான செரிமானக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே இந்த யானை சுயநினைவிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வயலில் விழுந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள் யானையின் வாயினுள் சிக்கியிருந்த ஆபத்தான பொலித்தீன் கழிவுகளைக் குச்சி ஒன்றின் உதவியுடன் மிகவும் நுணுக்கமாக அகற்றியுள்ளனர்.

தொடர்ந்து பலவீனமாக இருக்கும் அந்த யானைக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பழங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் குறித்த யானைக்கு வனவிலங்கு சுகாதாரப் பிரிவினரால் அவசர மருத்துவச் சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யானையை மீண்டும் முழுமையாகக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top