சவூதியில் ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு விடிவு - ரூ.569 இலட்சம் மீட்பு

Author
0

 சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569 இலட்சம் ரூபாய் இன்று (13) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் தேவப்பிரிய குணசிங்க தலைமையில் இந்த நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்தப் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 639,381 சவூதி ரியால்கள் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 569 இலட்சம் ரூபாய்) அறவிடப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.



இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழில் மற்றும் தொழிலாளர் நலன்புரிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான தலையீடுகள், சுற்றிவளைப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் ஊடாகவே இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணியாளர்களை மீட்டு, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரவதற்கும் தூதரகத்தின் குறித்த பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.


தூதரகத்தினால் மீட்கப்பட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த உரிமைத் தொகை, இன்று உரிய பணியாளர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top