மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் கொடிகாமம் பொலிஸார் நேற்று இரவு நடத்திய திடீர் சோதனையின் போது ஏகே 47 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 96 ரவைகள் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதணைகளின் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
31 மற்றும் 28 வயதான இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்களை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

