ஈரான் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!

Author
0
ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை மீறிப் பயணிக்க முயன்ற வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஓமான் வளைகுடா கடற்பரப்பில் கடந்த 26ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.

பலாவு நாட்டின் கொடியுடன் பயணித்த ‘M/V Pacific Archer’ என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.


ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல், பலமுறை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்துப் பயணிக்க முயன்றதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அமெரிக்க இராணுவத்தின் வானூர்தி மூலம் கப்பலின் பின்பகுதி தாக்கப்பட்டதில் அதன் உந்துவிசை அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கப்பலில் இருந்த பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 158 வர்த்தகக் கப்பல்கள் வேறு திசைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதுடன், கடற்படை முற்றுகைக்கு இணங்க மறுத்த ஆறு கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் அமெரிக்க இராணுவம் விடுக்கும் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top