எரிபொருள் விலை உயர்வு - பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

Author
0

 நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை என்பதால், கட்டணங்களை உயர்த்த முடியாது என தெரிவித்துள்ளார்.   


தற்போது பேருந்து தொழிலை நஷ்டத்திலேயே நடத்திச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் (JNJIA) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top