ஜேர்மன் ஆயுதங்களால் ரஷ்யாவுடன் மோதல் ஏற்படலாம்... பிரான்ஸ் அச்சம்

Author
0

 ஜேர்மனியின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளால் ரஷ்யாவுடன் அணு ஆயுத மோதல் ஏற்படலாம் என பிரான்ஸ் அச்சம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் துவக்கிய விடயம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதால், அவை தங்கள் ராணுவங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

அவ்வகையில், ஜேர்மனியும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் முதலான ஆயுதங்களை வாங்கியும், தயாரித்தும் சேமித்துவருகிறது.

பிரான்ஸ் அச்சம்

ஆனால், ஜேர்மனியின் இந்த நடவடிக்கையால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக பிரான்ஸ் எச்சரித்துள்ளது. அதாவது, ஜேர்மனியின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ரஷ்யாவை தாக்க பயன்படுத்தப்படுமானால், அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவால் ஆபத்து நேரிடலாம் என பிரான்ஸ் அஞ்சுகிறது.


குறிப்பாக சொல்லப்போனால், பிரான்ஸ் ஜேர்மனியின் கூட்டாளர் நாடு. பிரான்சிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

ஆக, ஜேர்மன் ஆயுதங்கள் ரஷ்யாவுக்குள் சென்று தாக்குமானால், அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டின் ஆதரவுடன், அதாவது, பிரான்சின் ஆதரவுடன் ஜேர்மனி தாக்குவதாக ரஷ்யா தவறாக புரிந்துகொள்ளுமானால், ரஷ்யா திருப்பித் தாக்க வாய்ப்புள்ளது. 

அதுவும், அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்த வாய்ப்புள்ளது. அத்துடன், அணு ஆயுதம் வைத்திருக்கும் பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என பிரான்ஸ் தரப்பைச் சேர்ந்த ஒரு அலுவலர் ஃபைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஜேர்மன் அலுவலர்களுடன், ஜேர்மனி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை எப்போது, எப்படி பயன்படுத்தும் என்பது குறித்து ஒரு புரிதலை ஏற்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top