பார்வையற்றோர் கிரிக்கெட்டில் விளையாடாமலே பாகிஸ்தானுக்கு கிண்ணம்; இந்தியா எதிர்ப்பு

Author
0

 பார்வையற்றோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு கிண்ணம்

வங்கதேச தலைநகர் டக்காவில், பார்வையற்றோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை நடைபெற்றது. 

நேற்று நடைபெறவிருந்த இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்தன. ஆனால், மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து லீக் சுற்றில் சிறந்த நிகர ரன் விகிதம் (Net Run Rate) பெற்றிருந்ததால், பாகிஸ்தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. 

இந்தியா எதிர்ப்பு

இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி, கிண்ணம் வழங்கும் நிகழ்வை புறக்கணித்தது.

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வழங்கி இருக்க வேண்டும் என பார்வைக் குறைபாடு உடையோருக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் மேலாளர் தீரஜ் செக்கீரா, "உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்பக் குழுவின் இது ஒரு முழுமையான தோல்வி. தொழில்நுட்ப இயக்குநர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

துரதிர்ஷ்டவசமாக, இதில் ஒரு நல முரண்பாடும் உள்ளது. ஏனெனில், அவர் அணியின் பிசியோவாகவும் இருக்கிறார். ஒருவர் அணியின் ஒரு பகுதியாகவும், தொழில்நுட்ப இயக்குநராகவும் ஆகிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுவே இந்தப் பிரச்சனைக்குக் காரணம். அவரது பெயர் தாஹிர் பட்.

பாகிஸ்தானைச் சேர்ந்த திரு. தாஹிர் பட், உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்ப இயக்குநராக இருக்கிறார். மேலும், தற்போது உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பவர், பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார்.

தொழில்நுட்ப இயக்குநர், பொதுச் செயலாளர் மற்றும் உலகளாவிய மேம்பாட்டு இயக்குநர் ஆகிய மூன்று பேரில், இருவர் அது சரியல்ல என்று கருதினர். இருப்பினும், தொழில்நுட்ப இயக்குநர் பாகிஸ்தான் ஜனாதிபதியிடம் சென்றார். அவர்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கும் முடிவை ரத்து செய்து, பாகிஸ்தானை ஆசியக் கோப்பையின் ஒரே வெற்றியாளராக ஆக்கினர்" என்று கூறினார்.

மேலும், இந்த சர்ச்சை தீர்க்கப்படும் வரை உலகளாவிய பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாது என்று இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் (CABI) செயலாளர் சைலேந்திரா தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top