முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று(09.11.2026) முன்னிலையாகியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு அரசாங்க நிறுவனங்களில் ஊதியம்
கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, ஒரே நேரத்தில் இரண்டு அரசாங்க நிறுவனங்களில் இருந்து ஊதியம் பெற்று அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

.jpg)