டொலர் 1385 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்: எச்சரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்

TubeTamil News
0

 தற்போதைய மதிப்பீட்டின்படி 2048 ஆம் ஆண்டளவில் டொலர் 1385 ரூபாவாக இருக்கும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது எனவும் தெரிவித்தார்.

 அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13205 டொலர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top