ரஷ்யாவில் தொடரும் பதட்டம்; கூலிப்படையினரிடம் வீழ்ந்த முக்கிய நகரம்!

TubeTamil News
0
ரஷ்யாவில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையினர் கலகம் செய்துவரும் நிலையில் நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.ரொஸ்டாவ் ஒன் நகரில் அரசாங்க அலுலகத்தை வாக்னர் கூலிப்படையினர் சுற்றிவளைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ டெலிகிராமில் வெளியாகியுள்ளது. இந்த வீடீயோவின் உண்மை தன்மையை உறுதிசெய்துள்ள பிபிசி சீருடையணிந்த நபர்கள், ஆளுநரின் கட்டிடத்திற்கு அருகில் காணப்படுகின்றனர்.


கூலிப்படையினர் கட்டுப்பாட்டில் இராணுவதலைமையகம் 
அத்துடன் கவசவாகனங்கள் சுற்றிவளைத்துள்ள இரண்டு டாங்களை கட்டிடத்தை இலக்குவைத்தபடி காணப்படுகின்றன என தெரிவித்துள்ளது. இது அந்த நகரத்தின் பொலிஸ் தலைமையகம் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

அதேவேளை ரஸ்யாவின் தென்பகுதி நகரமான ரொஸ்டொவ் ஒன் டொன் நகர் வாக்னர் கூலிப்படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு அங்குள்ள , இராணுவதலைமையகத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வாக்னர் கூலிப்படையினர் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் அந்த நகரின் இராணுவதலைமையகத்திற்குள் இருப்பதாக தெரிவித்துள்ளமை பரப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர், ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள் முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறி ரஷ்யாவில் கலகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top