மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து! போராட்டத்தில் குதித்த மாணவிகள்

keerthi
0




பரதக் கலைக்கு எதிராக மௌலவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.


இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன் இடம்பெற்றது.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


"பரதக்கலை" சம்மந்தமாக இஸ்லாமிய மௌலவி ஒருவரின் சர்ச்சைக்குரிய மேடை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


அத்தோடு நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், கையில் பதாகையுடன் எதிர்ப்பு கோசங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். அதனை தெய்வீக கலையாக நாங்கள் கடந்துவரும் நிலையில் அதனை கீழ்த்தரமான கலையாக விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவரின் கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top