நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் நாளைய தினம் விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்களுக்கும், 15 பெண்களுக்கும் ஜனாதிபதியினால் இவ்வாறு விசேட பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி. செனரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியமையினால் சிறையில் உள்ள கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.