’யுக்திய’வில் இதுவரையில் 13,666 பேர் கைது..!!

tubetamil
0

 போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ சுற்றிவளைப்பு திட்டத்தின் போது 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ், STF மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் டிசம்பர் 17ஆம் திகதி அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கை இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடைந்தது.

13,666 பேரில் 717 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளுடன் மேலதிக விசாரணையில் உள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு 12:30 மணி நிலவரப்படி, 9.82 கிலோ கிராம்கிராம் ஹெரோயின், 4.679 கிலோ கிராம் ஐஸ், 272 கிலோ கிராம் கஞ்சா, 944,651 கஞ்சா செடிகள், 117 கிலோ கிராம் மாவா, 35 கிலோ கிராம் சாம்பல், 989 கிராம் ஹஸிஸ், 3 கிலோ கிராம் துலே, 520 கிராம் குஷ் மற்றும் 65,924 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், 174 சந்தேக நபர்கள் சட்டவிரோத சொத்து வைத்திருப்பிற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் போதைக்கு அடிமையான 1,097 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

மேலும், பாதாள உலகக் குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட ஏராளமான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top