நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்களின் சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 கிலோ 370 கிராம் ஹெரோயின், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 1,075 மாத்திரைகளும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.