வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது…
* நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது.
* தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.
* நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும்.
* தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* தற்போதைய மழைக்கான காரணம் மேகவெடிப்பு இல்லை.
* வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை.