ஒருபோதும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்- ஓ.பன்னீர்செல்வம்

keerthi
0

 அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சி பெயர், சின்னம் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

அடுத்த கட்டமாக கட்சியை நடத்துவது எப்படி? என்பது தொடர்பாக அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.

 எனினும்    இதையொட்டி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று நடந்தது.

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது தெரிவித்ததாவது….

அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்பு குழு என்பது தற்காலிக அமைப்பு தான். எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.

கோர்ட்டு தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. தேர்தலை சந்திக்க கீழ் மட்டம் வரை நமது கட்டமைப்பு பலமாக உள்ளதா? என் பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமைகளை நிச்சயம் மீட்டெடுப்போம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top