மோப்பநாயின் உதவியால் யாழில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசேட போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக நேற்றையதினம்(18) நெல்லியடிப் பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இச்சம்பவம் நடந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருளை உடைமையில் வைத்துக்கொண்டு வீதியால் சென்ற இரண்டு இளைஞர்களை பொலிஸ் மோப்ப நாய் அடையாளம் காட்டியதை அடுத்து அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு
அவர்களிடமிருந்து சிறு தொகை போதைப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.