திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தா சொன்ன பதில்

keerthi
0


திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. இவர் மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 சம்பளமாக பெற்று வந்தவர் அப்படி விளம்பரம், நாயகி என தனது உழைப்பால் உயர்ந்தார். 

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர் இப்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்க தொடங்கியுள்ளார். இவரது சினிமா பயணம் தற்போது பின்தங்கியுள்ளது காரணம் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆக்டீவாக இல்லை.

அதற்கு பதில் போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இருக்கிறார். அண்மையில் Tralala என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்து செய்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் நடிகை சமந்தா. 

அப்போது ஒரு ரசிகர் மறுமணம் பற்றி கேட்க அதற்கு அவர், அது தவறான முடிவு.

2023ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 50 சதவீதம்; இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவகாரத்து 67 சதவீதம்; மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம்" என குறிப்பிட்டிருக்கிறார்.  Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top