“யேசுநாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமாக அமையட்டும்”

tubetamil
0

 மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாமல் மனமுடைந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் “யேசுநாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமான அமைய வேண்டும்” எனக் கூறி தற்கொலை செய்வதற்காக கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்ட  சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 11 மணிக்கு இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த  5 பிள்ளைகளின் தந்தையான மேசன் தொழில் செய்யும் 42 வயதுடைய நபர் தொழில் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் வருடத்தில் ஒருதடவை வரும் நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாத நிலையில், வீட்டைவிட்டு வெளியேறி யேசுநாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமான அமைய வேண்டும் என கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்துள்ளார்.

இந்த நிலையில் வாவியில் இருந்த குதித்து நீரில் தத்தளித்த நிலையில் பாலத்தின் தூனை படித்துக் கொண்டு காப்பாற்றுமாறு கத்திய போது அங்கு தோணியில் மீன்பிடியல் ஈடுபட்வர்கள் அவரை காப்பாற்றி கரை சேர்த்து பொலிஸாருக்கு அறிவித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த நபரை பொலிஸார் கைது செய்து  தற்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top