சும்மா இருந்தாலும் சொறிஞ்சு விடுறாங்களே..!!

tubetamil
0

 வாய்ப்பை தவற விட்டுட்டாரே விஜய் என மீண்டும் விஜய் ரசிகர்களை ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் சீண்ட ஆரம்பித்துள்ளனர். லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினதை, லியோ விழாவில் விஜய் பேசி இருந்தால் எப்படி இருந்திருக்கும்னு நினைச்சு பாருங்க..

எனக்கு 13 வயசா இருக்கும் போதே, தர்மத்தின் தலைவன் ஷூட்டிங்கில் ரஜினி சாரை பார்த்தேன், அவர் என்னை நல்லா படிச்சிட்டு சினிமாவுக்கு வா கண்ணான்னு சொன்னார் என விஜய் சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என விஜய் பேச வேண்டியதை எல்லாம் ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்தின் பேச்சை வைத்து கற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.ரஜினியை பார்த்து, அவர் முன்னால் நடித்து, இன்று நான் இந்த நிலையில் உங்கள் முன் நிற்கிறேன் என விஜய் சொல்லவில்லை. நான் என்றுமே அவருக்கு போட்டி இல்லை, அவருக்கும் நான் போட்டி இல்லை என்றும் கூறவில்லையாம்.அவர் என்றுமே என்னோட நலம் விரும்பி தான், அதனால எங்களை வைத்து ரசிகர்கள் சண்டை போடாதீர்கள் என்றும் விஜய் சொல்லவில்லை என்றும், விஜய்க்கு script எழுதி குடுத்த புண்ணியவான், ” சார், நீங்க காக்கா, கழுகுன்னு சொல்லிட்டு, ஓரு pause விட்டு, மைக்கை சுத்தி வாங்க, claps பிச்சுக்கும்னு ” சொல்லிருக்கான். ரஜினி பேசியதை, விஜய் பேசி இருந்தால் விஜய், ரஜினி ஆகியிருப்பார். ஆனால் விஜய் பேசலை.. ஏன்னா இங்க ரஜினி ஒருத்தர் தான்” என மீண்டும் ரசிகர் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.சூப்பர் ஸ்டார் ஒருத்தர் தான் என்றும் அப்பா சட்டையை பையன் போட ஆசைப்படுறதுல என்ன தப்பு என்றும் விஜய் பேசியது உங்களுக்கு கேட்கலையா என விஜய் ரசிகர்கள் மீண்டும் ரஜினி ரசிகர்களை திட்டத் தொடங்கி விட்டனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top