குறி வச்சா இரை விழணும் என பல நடிகைகளை ஜோடியாக்கி வந்த நடிகர் தனுஷ் விவாகரத்துக்குப் பிறகு ஹீரோயின் வேட்டையில் வீக் ஆகிவிட்டார் என்றே கூறுகின்றனர். அதிலும், அந்த பாலிவுட் தயாரிப்பாளரின் மகளை ஹீரோயினாக்க தனுஷ் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாக போய் விட்டது என அரசல் புரசலான பேச்சுக்கள் அடிபட்டன.
இந்நிலையில், அதே ஹீரோயின் சூர்யாவின் அடுத்த படத்தில் ஜோடி போட்டு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அந்த நடிகை வேற யாருமில்லை மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்த ஜான்வி கபூர் தான். பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் தென்னிந்தியாவில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் அவர் ஹீரோயினாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. அதே போல சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் அவர் தான் ஹீரோயின் என சொல்லப்பட்டது. ஆனால், தனுஷுடன் ஜான்வி கபூர் இணைந்து நடிக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஷ்மிகா மந்தனா தான் தெலுங்கு இயக்குநருடன் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தில் ஜான்வி கபூர் ஜோடியாக போவதாக ஒரு சூடான அப்டேட் வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் ராக்கேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள கர்ணா எனும் பிரம்மாண்ட படத்தில் தான் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் கமீட் ஆக உள்ளாராம்.இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தில் ஜான்வி கபூர் ஜோடியாக போவதாக ஒரு சூடான அப்டேட் வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் ராக்கேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள கர்ணா எனும் பிரம்மாண்ட படத்தில் தான் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் கமீட் ஆக உள்ளாராம்.