ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஷ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தயாஷ்ரித திசேராவை புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டியா தொகுதியின் அமைப்பாளராக நியமித்தார்.