அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ- இந்திய வாலிபர் பலி..!

keerthi
0


 இந்தியாவை சேர்ந்தவர் பாசில்கான் (27). இவர் அமெரிக்காவில் தி ஹெச்சிங்கர் ஊடகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பாசில்கான், நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தார்.

அத்தோடு இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இ-பைக் பேட்டரியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பில் பரவியது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியேற முயன்றனர். 

ஆனால் சிலர் தீ, புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் பாசில்கான் சிக்கி உயிரிழந்தார். தீயில் இருந்து தப்பிக்க 17 பேர் ஜன்னல்கள் வழியாக குதித்தனர். காயம் அடைந்த அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

எனினும்      இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, "ஹார்லெமில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் இந்தியாவின் பாசில்கான் இறந்ததைப் பற்றி அறிந்து வருத்தமடைந்தோம். 

நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது. அவரது குடும்பத்துக்கு உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்"என்று தெரிவித்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top