கைது செய்யப்பட்ட விஐபிகள் சிறையில் சொகுசாக வாழ்கின்றனர்..!!

tubetamil
0

 வெலிக்கடை சிறைச்சாலைக்குப் பொறுப்பான பெண் வைத்திய பொறுப்பதிகாரி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரமுகர்களை சிறைச்சாலை வைத்தியசாலைக்குள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க அனுமதித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் (GMOF) நேற்று குற்றம் சுமத்தியுள்ளது.

GMOF தலைவர் டெய்லி மிரரிடம் கூறுகையில், மருத்துவ அதிகாரி தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தியதாக சுகாதார அமைச்சிடம் பலமுறை முறைப்பாடளித்தும் அதிகாரிகள் வாய் திறக்காமல் உள்ளனர்.

“குறிப்பிட்ட மருத்துவ அதிகாரியின் நடவடிக்கை விஐபிக்கள் மட்டுமல்ல, சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சிறை மருத்துவமனைக்குள் வசதியாக தங்க அனுமதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள உண்மையான நோயாளர்கள் சிகிச்சை பெறும் வாய்ப்பை இழந்துள்ளதாக வைத்தியர் பெல்லன தெரிவித்தார்.

மேலும், மனித உரிமைகள் பேரவை மற்றும் உள்ளக வைத்தியர்களிடம் பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை அந்த வைத்தியருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி மருத்துவர் பிரதம மருத்துவ அதிகாரி என்ற முத்திரையுடன் பணிபுரிய வந்துள்ளதாகவும், ஐந்து வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்ற சுகாதார அமைச்சு அனுமதித்துள்ளதாகவும் டொக்டர் பெல்லன தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top