குருநாகல், பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கருகில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன், எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதி, இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.