மைனா படத்தில் எப்போ வரீங்க எப்போ வரீங்க என மிரட்டல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சூசன் இப்போ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை சூசன் முதன் முதலில் சீரியல்களில் வில்லியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் வைத்துள்ளார். விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான சுழியம் தொடரின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார் சூசன்.
இவரின் இந்த வில்லி கதாபாத்திரத்திற்கு ரசிகர் பட்டாளம் குவிந்ததன் காரணமாக இவர் வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார். இதன் பின்னர் மைனா படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் தெரியாதவர்களுக்கும் தெரிந்தவராக மாறினார்.
அந்த வகையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தில் நடிப்பை விட்டு விலகிய சூசன் குடும்பம் கணவர் என செட்டிலாகி இருப்பது தெரிகிறது.