கிளாமர் ரூட்டில் இறங்கிட்டாரா நயன்தாரா?..

tubetamil
0

 நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவந்திருக்கின்றன.

 ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.


ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.


இதற்கிடையே நயன்தாரா சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் தொடங்காமல் இருந்தார். ஆனால் ஜவான் படத்தின்போது தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். அதேபோல் பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர்; விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் நேசிப்பாயா படத்தின் விழாவில் கலந்துகொண்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.


இந்நிலையில் நயன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களில் கருப்பு சட்டையில் இரண்டு பட்டனை அவிழ்த்துவிட்டு போஸ் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் நயன் கிளாமர் ரூட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டு புகைப்படங்களை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top