வெற்றியைக் குவிக்கும் சூரிய பகவான்..

tubetamil
0

சூரிய பகவானின் மாற்றத்தினால் ஜாக்பாட்டை பெறும் 5 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.


நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக இருந்து வருகின்றார்.

மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய இவர், மாற்றத்தின் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் ஜுலை 16ம் தேதி கடக ராசியில் சஞ்சரிக்க உள்ளார். 

இந்த மாற்றம் பலருக்கு சுப பலன்களைத் தரும் நிலையில், பல ராசிகளுக்கு மங்களகரமானதாகவும் கருதப்படுகின்றது.

சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் நாளே சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியனின் அருளுடன் தொடர்புடைய ராசியானது செல்வம், கௌரவம், முன்னேற்றம் மட்டுமல்ல, மாபெரும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. 


சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசியில் நான்காவது வீட்டில் உள்ளதால் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படுவதால் நிம்மதியும், மகிழ்ச்சியும் காணப்படும்.

ரிஷப ராசியில் சூரியன் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழிலில் புதிய சாதனைகள் படைப்பதுடன், இந்த காலக்கட்டத்தில் நிதி லாபம் கிடைக்கும். தொழிலில் நிம்மதி இருப்பதுடன், செல்வம் குவியுமாம். குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


மிதுன ராசிக்கு சூரியன் சஞ்சாரம் இரண்டாவது வீட்டில் நடைபெற உள்ளதால், தொழிலில் பெரிய வெற்றி அடைவதுடன், வேலையிலும் வெள்ளி கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்குமாம்.


சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசியினருக்கு சிறப்பாக இருப்பதுடன், நிதி நிலைமை மேம்பட்டு அதிக பணம் சம்பாதிக்கவும் செய்வீர்கள். எந்தவொரு வேலையும் வெற்றியில் முடிவதுடன், பணிகள் தொடர்பாக பாராட்டுகளும், புதிய வாய்ப்புகளும் வந்து சேரும்.

விருச்சிக ராசியினருக்கு சூரியனின் ராசி மாற்றம் ஆதாயம் கிடைப்பதுடன், வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், நிதி நிலை மேம்படும். ஆனால் செலவுகளை மட்டும் குறைக்க வேண்டும்.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top