2046 லிட்டர் கோடா பொலிசாரால் அழிப்பு

tubetamil
0

 2046 லிட்டர் கோடா பொலிசாரால் அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.


தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.



இதன் பொழுது கசிப்பு உற்பத்தியில் மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட 2040 லீட்டர் கோடாவினை அப்பகுதியில் வைத்து பொலிசார் அழித்துள்ளனர். 



அத்துடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top